கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Millet
கேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1கப் கேழ்வரகு மாவு
  2. 1கப்கோதுமை மாவு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. உப்பு
  6. தாளிக்க:
  7. 2டீஸ்பூன் ஆயில்
  8. 1/2டீஸ்பூன் கடுகு
  9. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  10. 1டீஸ்பூன் கடலை பருப்பு
  11. சிறிதுபெருங்காயம்
  12. சிறிதுகொத்தமல்லித்தழை சிறிது கறிவேப்பிலை
  13. ரொட்டி சுடுவதற்கு தேவையான ஆயில்
  14. ரொட்டி தட்டுவதற்கு ஒரு தடுக்கு வாழை இலை
  15. சிறுது தண்ணீர்
  16. தேவையானஅளவு ஆயில்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1 கப் கேழ்வரகு மாவு, 1 கப் கோதுமை மாவை சலித்து எடுத்து வைக்கவும். இரண்டையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் சேர்த்து உப்பு சேர்த்து கலக்கி விடவும்.

  2. 2

    1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் சிறிது கறிவேப்பிலை சிறிது கொத்தமல்லி தழை கழுவி நறுக்கி எடுத்து வைக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு சிறிது பெருங்காயம் சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு வதக்கி விடவும். வதக்கியதை எடுத்து வைத்த மாவில் சேர்த்து விடவும்.

  3. 3

    தண்ணீர் சிறிது விட்டு மாவை கெட்டியாக பிசைந்து வைக்கவும். ஒரு சிறிய வாழை இலையில் தண்ணீர் சிறுதும் ஆயில் சிறிதும் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து இலகுவாக தட்டி வைக்கவும். தோசைக்கல்லை சூடேற்றி ஆயில் சிறிது விட்டு படத்தில் உள்ளது போல இலையை தோசைக்கல்லின் மேலே தட்டி விடவும். இலையை மெதுவாக எடுத்து விடவும்.

  4. 4

    ஆயில் விட்டு இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுத்து வைக்கவும்.

  5. 5

    சுவையான கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி தயார்.😄😄 பொட்டுக்கடலை சட்னி,நெய் வைத்து பரிமாறினேன். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes