தேங்காய் பால் கொழுக்கட்டை

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.
2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இரண்டு கப் பச்சரிசி மாவு
  2. 150 கிராம் வெல்லம்
  3. அரை கப் தேங்காய் துருவல்
  4. கால் கப் தேங்காய் பால்
  5. இரண்டு ஏலக்காய்
  6. தேவையான அளவு சுக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி மாவை தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதில் பிசைந்த மாவுகளை விரும்பிய வடிவில் உருட்டி கொழுக்கட்டையை போட்டு வேக வைக்கவும்

  3. 3

    5 நிமிடம் கொழுக்கட்டை வேக வைத்த பின்னர் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டையை கிளறவும்

  4. 4

    வெல்லம் கரைந்த பின்பு அதில் பொடித்து வைத்த ஏலக்காய் சுக்கைத் தூள் செய்து தூவவும்

  5. 5

    பின்னர் கால் கப் தேங்காய் பால் அரை கப் தேங்காய் துருவலை கொழுக்கட்டை மேல் தூவி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி விடவும்

  6. 6

    சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை ரெடி மாலை நேர உணவிற்கு சிறந்த ஒரு உணவாகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes