சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம்.

சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)

#GA4
சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1 கப் மைதா
  2. உப்பு தேவையான அளவு
  3. 1 ஸ்பூன் நெய்
  4. 1/4 ஸ்பூன் ஓமம்
  5. 250 கிராம் பட்டாணி
  6. 2 வெங்காயம்
  7. 1 தக்காளி
  8. 5 பச்சை மிளகாய்
  9. 100உருளைக்கிழங்கு
  10. மல்லி இலை
  11. கருவேப்பிலை
  12. 3 ஸ்பூன் சாட் மசாலா
  13. 3 ஸ்பூன் மாங்காய் பொடி
  14. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  15. 1 ½ ஸ்பூன் மல்லித்தூள் ‌
  16. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  17. 1/2 ஸ்பூன்பிரியாணி மசாலா
  18. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  19. 1/2 ஸ்பூன் மல்லி விதை
  20. 1/2 ஸ்பூன் சீரகம்
  21. 1/2 ஸ்பூன்சோம்பு
  22. புதினா
  23. 1 ஸ்பூன் எழுமிச்சை சாறு
  24. 1/2 கப் தயிர்
  25. 1/2 ஸ்பூன் சர்க்கரை
  26. கான் பிளேக்ஸ்
  27. ஓமப்பொடி...

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பச்சை சட்னி :. புதினா மல்லி பச்சை மிளகாய் சீரகம் இவற்றை மிக்சியில் போட்டு

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

  3. 3

    பட்டாணி மசாலா :. பட்டாணி யை 12 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து.. வேகவிடவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    இதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்க்கவும் பொடி வகைகளை தனியாக எடுத்து வைக்கவும்...

  6. 6

    தனியாக எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள் மல்லித் தூள் கரம் மசாலா ஆம்சூர் பவுடர் சாட் மசாலா மஞ்சள் தூள் போன்றவற்றை தக்காளியுடன் சேர்த்து உப்பு கலந்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.

  7. 7

    வேகவைத்த பட்டாணியை தக்காளி நன்கு வதங்கிய பின்பு சேர்த்து கலந்து விடவும்

  8. 8

    இது நன்கு கொதித்து கெட்டியான பின்பு இறக்கவும் பட்டாணி மசாலா தயார்..

  9. 9

    சமோசா: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு ஓமம் சேர்த்து

  10. 10

    பின்னர் நீ கலந்து நன்கு ரவை பதத்திற்கு பிசையவும்

  11. 11

    இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து இறுக்கமான சப்பாத்தி மாவு போன்ற பதத்துக்கு மாவு பிசைந்து 10 முதல் 20 நிமிடம் ஊற விடவும்.

  12. 12

    உருளை மசாலா:. உருளைக்கிழங்கை வேகவைத்து வைக்கவும்.மன்னி விதைகள் சோம்பு சீரகம் இவற்றை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

  13. 13

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் வேக வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

  14. 14

    சாட் மசாலா ஆம்சூர் பவுடர் சேர்க்கவும்

  15. 15

    உருளைக்கிழங்கு தேவையான உப்பு மற்றும் மல்லி பொடித்தது சேர்க்கவும் இதை நன்கு கலந்து மல்லித்தழை தூவி மசித்து தனியாக ஆறவிடவும்.

  16. 16

    பிசைந்து வைத்துள்ள மாவினை சிறிய வட்டங்களாக தேய்த்து பின்னர் அரை வட்டமாக வெட்டி அதனை கோன் போல சுற்றி தண்ணீரால் ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.

  17. 17

    இந்தக் கப்பு வடிவத்திற்குள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மீண்டும் தண்ணீர் கொண்டு ஒட்டி சமோசா தயாரிக்கவும்.

  18. 18

    இதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

  19. 19

    பரிமாறும் முறை:. இதுவரை செய்துள்ள அனைத்தையும் தயாராக வைத்திருந்து ஒரு கப்பில் தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும் கட்டி இல்லாமல்....

  20. 20

    பரிமாறும் தட்டத்தில் :. பதட்டத்தில் சமோசா வினை துகள்களாக உடைத்து வைக்கவும் அதன்மீது பட்டாணி மசாலா வைத்து ஊற்றி....

  21. 21

    அதன்மீது பற்றி சட்னி சேர்த்து தக்காளியும் மோவி பின்னர் சாட் மசாலா தூள் தூவவும்.

  22. 22

    பின்னர் மாங்காய் பொடி தூவி நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து மல்லி இலை தூவவும்..

  23. 23

    இதன் மீது பச்சை மிளகாய் சிறிது தூவி பொறித்து வைத்துள்ள கான்பிளலக்ஸ் மேலே பரப்பி பின்னர் ஓமப் பொடி சேர்க்கவும்......

  24. 24

    சார்கரையுடன் கலந்த தயிர் சேர்க்கவும்..

  25. 25

    சுவையான சாட் மசாலா நமது வீட்டிலேயே தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes