எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 முதல் 5 மணி நேரம்
நிறைய நபர்கள்
  1. இட்லி புழுங்கல் அரிசி ஒன்றை படி
  2. 25 முதல் 30காய்ந்த மிளகாய் உங்களுக்கு தேவையான அளவு காரம் சேர்த்துக் கொள்ளவும்
  3. பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. வெண்ணை இரண்டு டீஸ்பூன்
  6. எண்ணை பொரிக்க தேவையான அளவு
  7. கடலைப்பருப்பு அரை கப்
  8. வறுத்த வேர்க்கடலை ஒரு கப்
  9. கருவேப்பிலை பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடி
  10. ஓமம் ஒரு டீஸ்பூன்
  11. பூண்டு ஒரு கட்டை
  12. பொட்டுக்கடலை ஒரு படி
  13. சூடான எண்ணெய் ஒரு குழிக்கரண்டி

சமையல் குறிப்புகள்

4 முதல் 5 மணி நேரம்
  1. 1

    அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும் மிளகாயை ஒரு கப்பில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஊற விடவும். கடலைப்பருப்பையும் தனியே ஊற விடவும்

  2. 2

    ஊறிய அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பொட்டுக்கடலையை நைசாக பொடி செய்து சலித்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோலை எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டை இடித்து வைக்கவும்.

  4. 4

    அரைத்த அரிசி மிளகாய் மாவுடன் பொடித்த வேர்க்கடலை, இடித்த பூண்டு, உப்பு, பெருங்காயத்தூள்,பொட்டுக்கடலை மாவு,ஊறிய கடலை பருப்பு, ஓமம்,கருவேப்பிலை, பெருங்காயத்தூள், சிறிது சூடான எண்ணெய், வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்.

  5. 5

    ஒரு காட்டன் துணியை இரண்டாக மடித்து விரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த முறுக்கு மாவை சிறிது உருண்டையை எடுத்து அந்த துணியின் மேல் தட்டி கொள்ளவும்.

  6. 6

    தட்டிய மாவின் மீது முள் கரண்டியால் லேசாக குத்தி விடவும். அப்பொழுது தான் முறுக்கு எண்ணெயில் போட்டு பொரிக்கும் பொழுது பூரி போல் உப்பலாக வராமல் இருக்கும்.

  7. 7

    தட்டிய மாவை தோசை கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  8. 8

    காரசாரமான தட்டை முறுக்கு தயார்

  9. 9

    மாவு பிசைந்த பின் ரொம்ப கெட்டியாக இருந்தால் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவு பிசைந்த பின் ரொம்ப லூசாக இருந்தால் சிறிது பொட்டுக்கடலையை பொடித்து சலித்து சேர்த்துக் கொள்ளவும்.

  10. 10

    உங்களுக்கு அளவு கம்மியான முறுக்கு தேவை என்றால் நான் அரிசி ஒன்றரை படி போட்ட இடத்தில் நீங்கள் ஒன்றரை டம்ளர் அரிசி போட்டு செய்து பார்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes