அவல் கிச்சடி.        (Aval khichadai recipe in tamil) 

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சி தருகிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்க செய்யும். #ga4#week7#khichdi

அவல் கிச்சடி.        (Aval khichadai recipe in tamil) 

அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சி தருகிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்க செய்யும். #ga4#week7#khichdi

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1/2கப் சிகப்பு அவல்
  2. 1கப் தேங்காய்ப்பால்
  3. 1டேபிள்ஸ்பூன் நிலக்கடலை
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1பெரிய தக்காளி
  6. 2டீஸ்பூன் எண்ணெய்
  7. 1/2டீஸ்பூன் சீரகம்
  8. 1டேபிள்ஸ்பூன் தனிமிளகாய் தூள்
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. உப்பு சுவைக்கேற்ப
  11. மல்லித்தழை சிறிதளவு
  12. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நிலக்கடலையை வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    அவலை நன்றாக தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்த பின், தேங்காய் பாலில் 10 நிமிடம் ஊறவிடவும்

  3. 3

    அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு,சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    தனிமிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்கவும்.

  5. 5

    தேங்காய்ப்பாலுடன் ஊறிருக்கும் அவலை சேர்த்து, தேங்காய்ப்பால் சுண்டும் அளவுக்கு கிளறி விடவும்.

  6. 6

    பின் நிலக்கடலை பொடி சேர்த்து, கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

  7. 7

    தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes