ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. வறுத்த ரவை - 1 கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. கேரட் - 2
  6. பீன்ஸ் - 5
  7. கடலை பருப்பு - 1 தே.க
  8. கடுகு உளுந்து - 1 தே.க
  9. மஞ்சள் தூள் -1/2 தே.க
  10. கறிவேப்பிலை - சிறிதளவு
  11. முந்திரி பருப்பு - 15 - 20
  12. தண்ணீர் -2.5 கப்
  13. எண்ணெய் - 2 தே.க
  14. நெய் -2 தே.க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றவும்.

  2. 2

    பிறகு அதில் கடுகு, உளுந்து சேர்க்கவும், கடுகு பொரிந்ததும் கடலை பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்க வேண்டும்.

  3. 3

    அதன் பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும், வெங்காயம் நிறம் மாறியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும்.

  4. 4

    பிறகு கேரட், பீன்ஸ் (தேவைப்பட்டால் பச்சை பட்டாணி சேர்த்து கொள்ளவும்) சிறிது நேரம் வதக்கியதும், தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    காய் கறிகள் முக்கல் பதம் வெந்ததும் சிறிது சிறிதாக வறுத்த ரவையை கொட்டி கை விடாமல் கிளறவும். (ஒன்றாக சேர்த்தால் கட்டி பிடிக்க தொடங்கிவிடும்) பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    ஆரோக்கியமான ரவா கிச்சடி தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes