கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.
#kids1

கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)

பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.
#kids1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 குழந்தைகள்
  1. 5பிரெட் துண்டுகள்
  2. 4 ஸ்பூன் தண்ணீர்
  3. 3 ஸ்பூன் சர்க்கரை
  4. 2 ஸ்பூன் வெண்ணெய்
  5. 3 ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிரெட் ஓரத்தை கட் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
    அதை ஒரு கடாயில் போட்டு மிதமாக வறுத்து எடுக்கவும்

  2. 2

    பின்னர் ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அதில் மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்

  3. 3

    லேசாக சர்க்கரை கரையும் நேரத்தில் அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.

  4. 4

    இரண்டு நிமிடம் கழித்து அதில் மூன்று ஸ்பூன் பாலை சேர்க்கவும். மிதமான தீயில் ஒரு 10 நிமிடம் லேசாக கிண்டி விடவும்

  5. 5

    பால் வெண்ணெய் இரண்டும் சேர்ந்து கெட்டியாக வரும். அந்த நேரத்தில் வருத்தெடுத்த பிரெட் துண்டுகளை அதில் சேர்த்து கிளறவும்

  6. 6

    பின்னர் அதை ஒரு தட்டில் வைத்து பரிமாறலாம். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக ருசிப்பார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சுகன்யா சுதாகர்
அன்று

Similar Recipes