அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு சலித்து எடுத்து கொள்ளவும்.அவலை மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்து சல்லடையில் சலித்து அரிசி மாவுடன் சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி சல்லடையில் சலித்து இந்த மாவில் சேர்க்கவும்.
- 3
இதில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், எள், சீரகம் சேர்த்து கலந்து விடவும். பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சூடு செய்து இதில் ஊற்றி கொள்ளவும்.
- 4
கை வைத்து மாவு ஒன்று சேர்ந்து வருமாறு கலந்து விட்டு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிறகு மாவு காயாமல் இருக்க ஈர துணியால் மூடி வைத்து கொள்ளவும்.
- 5
முறுக்கு குழலில் உட்புறமாக எண்ணெய் தடவி வைக்கவும். சிறிதளவு மாவை எடுத்து குழலில் உட்புறம் வைத்து மூடி வைக்கவும்.
- 6
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.இரண்டு கரண்டியில் எண்ணெய் தடவி முறுக்கு பிழிந்து எடுத்து எண்ணெயில் போட்டு கொள்ளவும்.
- 7
முறுக்கு வெந்து வரும் போது எண்ணெய் சலசலப்பு சத்தம் இல்லாமல் இருக்கும் அப்போது முறுக்கு எடுத்து கொள்ளவும்.முறுக்கு சூடு தணிந்த பின் டப்பாவில் எடுத்து வைக்கவும். அவல் முறுக்கு தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
-
கறிவேப்பிலை முறுக்கு - சத்தான குழந்தைகளுக்கான முறுக்கு (Karuveppilai murukku recipe in tamil)
#skvdiwali #kids1 Mathi Daksh -
-
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids Christina Soosai -
-
-
-
-
-
-
கமெண்ட் (2)