பார்பிக்யூ நேஷன் க்ரிஸ்பி கார்ன் (Crispy corn recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

பார்பிக்யூ நேஷன் க்ரிஸ்பி கார்ன் (Crispy corn recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1வேக வைத்த சோளக்கருது
  2. 1 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு
  3. 2 டேபிள் ஸ்பூன்கார்ன் ஃப்ளார் மாவு
  4. 1/2பெரிய வெங்காயம்
  5. 1கைப்பிடிமல்லித்தழை
  6. 1\2ஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. 1\4ஸ்பூன்சீரகத்தூள்
  8. 1\4ஸ்பூன்சாட் மசாலா
  9. 1\2மூடிஎலுமிச்சை பழம்
  10. 1\4+1\4ஸ்பூன்மிளகுத்தூள்
  11. உப்பு- தேவையான அளவு
  12. எண்ணெய்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வேக வைத்த சோளக்கருது நன்கு ஆறியதும் ஒரு ஸ்பூன் கொண்டு உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதனுடன் அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, பாதி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    இதனுடன் 1\2ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோளத்தை சிறிது சிறிதாகப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்

  5. 5

    அனைத்தையும் சிறிது சிறிதாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்

  6. 6

    இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்க்கவும்

  7. 7

    மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். வேறொரு பிளேட்க்கு மாற்றவும்

  8. 8

    பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை தூவி, டாப்பிங்காக சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்

  9. 9

    பார்பிக்யூ நேஷன் க்ரிஸ்பி கார்ன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes