சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)

எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன்.
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
பூரணம் தயாரித்துக்கொள்ள ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி சேர்க்கவும்.
- 2
அதனோடு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் நன்கு வறுப்பதால் பலகாரம் சில நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இந்தக் கலவையை நன்கு ஆறவைக்கவும்.
- 3
அதனை ஒரு தட்டில் மாற்றிக்கொண்டு அதே கடாயில் எடுத்து வைத்துள்ள கோவாவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். கோவா இலகிவிடும் இதனை ஒரு தட்டில் ஆற விடவும்.
- 4
மேல்மாவு தயாரிக்க 2 கப் மைதா மாவுடன் உப்பு மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்.
- 5
இதனை இரண்டு கைகளைக் கொண்டு லேசாக தேய்த்துக் கொள்ளவும். முழுமையாக தேய்த்த பின் மாவு பதத்தை சரிபார்க்க கொழுக்கட்டை பிடித்து பார்க்கவும்.
- 6
இப்போது அரை கப் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மாவை மிகவும் அழுத்தம் இல்லாமல் பிசைந்து கொள்ளவும். இறுதியில் எனக்கு 1 மேஜைக்கரண்டி தண்ணீர் மீதம் இருக்கிறது.
- 7
பிசைந்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 8
இப்போது ஒரு தட்டில் ஆரிய தேங்காய் கலவையுடன் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 9
அதன்பின் ஆறிய கோவாவை சேர்த்து நன்கு பிசைந்து பூரணத்தை தயார் செய்து கொள்ளவும்.
- 10
பாகு தயாரிக்க ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.இதனோடு குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும்.
- 11
கூடவே பொடித்த பிஸ்தா, ஏலக்காய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சைசாறு சேர்ப்பதனால் பாகு பனிப்பூக்காமல் இருக்கும்.
- 12
மிதமான தீயில் பாகு காய்ச்சி ஒரு கம்பிப் பதம் வந்தபின் இறக்கி வைக்கவும்.
- 13
இப்போது பிசைந்து வைத்த மாவை 3 mm திக்னஸ் இல் தேய்த்துக் கொள்ளவும். வட்டமான குக்கி கட்டர் வைத்து வெட்டிக் கொள்ளவும். இடையே உள்ள மாவை சுருட்டி எடுத்து மீண்டும் தேய்த்துக் கொள்ளலாம்.
- 14
இப்போது வெட்டி எடுத்த ஒரு வட்டத்தை எடுத்து 2 மேஜைக்கரண்டி அளவு பூரணத்தை நடுவில் வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி மடக்கி நன்கு ஒட்டி விடவும். படத்தில் காட்டியுள்ளபடி ஓரங்களை சுருட்டி சுருட்டி மடித்து விடவும்.
- 15
இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்.
- 16
பொரிக்க கடாயில் எண்ணெய் சூடுபடுத்தவும். ஒரு உருண்டை மாவை எண்ணெயில் போட்டால் மெதுவாக பொரிந்து மேலே வர வேண்டும் அந்த அளவிற்கு எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பலகாரத்தின் மேல் மாவு நன்கு வெந்து வரும்.
- 17
தயாரித்த சந்திரகலா அனைத்தையும் நான் இங்கு இரண்டு பங்காக பிரித்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து உள்ளேன்.
- 18
பொன்னிறமாக பொரிந்த பின் ஒரு வடிகட்டியில் எடுத்து விடவும் மிதமான சூடுள்ள சர்க்கரை பாகில் சேர்க்க வேண்டும். பலகாரத்தை சூடாக பாகில் சேர்க்க வேண்டும்.
- 19
சர்க்கரைப் பாகில் ஒரு பக்கம் இரண்டு நிமிடமும், திருப்பிப் போட்டு மறுபக்கம் இரண்டு நிமிடம் ஊற விடவும். அதிகமான நேரம் ஊறவிடவேண்டும் ஊறிய பலகாரத்தை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
- 20
அவ்வளவு தான் மிகவும் சுவையான தீபாவளி பலகாரம் சந்திரகலா நாம் எளிய முறையில் தயார் செய்துவிட்டோம். எனக்கு இங்கு 22 சந்திரகலா கிடைத்துள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
Makkan Peda
#vattaram #GA4 Arcot special Makkan Peda ஆற்காடு மாவட்டத்தில் மக்கன் பேடா மிகவும் பிரபலம் மக்கன் பேடா செய்வதற்கு கோவாவில் சிறிது மைதா மாவு சேர்த்து அதனுள் பொடித்த நட்ஸ் வைத்து செய்வது வழக்கம் அதை சுலபமாக நான் இங்கு உருவாக்குவதில் குலப் ஜமுன் மாவை வைத்து அதே சுவையில் தயார் செய்து வைத்துள்ளேன். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.இதனை வீடியோ வடிவத்தில் காண எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாருங்கள் https://youtu.be/YfgiszLFAN0 BhuviKannan @ BK Vlogs -
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார். Asma Parveen -
-
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (2)