கம்பு வாழைப்பூ வடை

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் கம்பு
  2. 1 கப் பட்டாணி
  3. 1 சிறிய வாழைப்பூ
  4. 3 வெங்காயம்
  5. 1/2 கப் கோதுமை ப்ரட் க்ரம்ஸ்
  6. 2 டேபிள்ஸ்பூன் கடலைமாவு
  7. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 2 பச்சைமிளகாய் அரைத்த விழுது
  11. 1/4 ஸ்பூன் சோம்பு தூள்
  12. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  13. 3 டேபிள்ஸ்பூன் தயிர்
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    கம்பு தானியத்தை இரண்டு முறை கழுவி தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் போட்டு கட்டி ஒரு நாள் முழுவதும் வைக்கவும் மறுநாள் நன்றாக முளை கட்டி இருக்கும்

  2. 2

    பின் அதை மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும் கம்பு நன்கு சத்தானது மற்றும் குளிர்ச்சியானது இதில் முளைக்கட்டி பயன்படுத்துவது வளரும் குழந்தைகளுக்கு இன்னும் நல்லது ஆரோக்கியமானது

  3. 3

    பட்டாணி ஐ எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி இரவு முழுவதும் வைக்கவும் மறுநாள் இதுவும் நன்றாக முளை கட்டி இருக்கும் இதை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்

  4. 4

    இப்போது அரைத்த கம்பு மாவு பட்டாணி விழுது உடன் இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் நரம்பு நீக்கி சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ சேர்க்கவும்

  5. 5

    பின் கோதுமை ப்ரட் க்ரம்ஸ் கடலைமாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் கரம் மசாலா தூள் சோம்பு தூள் தயிர் எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  6. 6

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் அதை வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு வேகவிடவும்

  7. 7

    இரண்டு புறமும் திருப்பி போட்டு நன்கு வேகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  8. 8

    சுவையான ஆரோக்கியமான கம்பு வாழைப்பூ வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes