பாதுஷா (Bhadusha recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன்

பாதுஷா (Bhadusha recipe in tamil)

#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கப் மைதா
  2. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  3. 2 டேபிள்ஸ்பூன்தயிர்
  4. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. எண்ணெய் பொரிக்க
  6. சர்க்கரை பாகு செய்ய
  7. 1 கப் சர்க்கரை
  8. 1 கப் தண்ணீர்
  9. 1/2 எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அகலமான பாத்திரத்தில் நெய் தயிர் பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு மைதா மாவு சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து பிறகு சிறுக சிறுக தண்ணீர் ஊற்றி மிருதுவான சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்... இதனை 15 நிமிடம் மூடி வைக்கவும்

  3. 3

    சிறு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து படத்தில் காட்டியவாறு சிறுசிறு நீளவாக்கில் கீறிக்கொள்ளவும் பிறகு மூன்றாக பிரிக்கவும்

  4. 4

    இப்போது மூன்றையும் மேலே ஒன்றாக இணைத்து பின்னல் போல் பின்னே சுருட்டி வைக்கவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் 20 முதல் 25 நிமிடம் வைத்து பொரித்தெடுக்கவும்

  6. 6

    கடாயில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

  7. 7

    ஒரு கம்பி பதம் வந்த பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து தயாரித்து வைத்திருக்கும் பாதுகைகளை இதில் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு திருப்பிப் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்

  8. 8

    சுவையான அட்டகாசமான பாதுஷா தயார் நீங்களும் இதை தயாரித்த பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes