ரசமலாய் (Rasamalai recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
6-7 பேர்
  1. செனா செய்ய
  2. 1 லிட்டர் பால்
  3. 1 எலுமிச்சை
  4. 1 கப் சீனி
  5. 1 டீஸ்பூன் கார்ன்ப்ளோர் மாவு
  6. ரப்டி செய்ய
  7. 3 கப் பால்
  8. 1/4 கப் சீனி
  9. தேவையான அளவுபொடித்த பாதாம், பிஸ்தா
  10. சிறிதளவுகுங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி கொதி த்ததும் எலுமிச்சை சேர்த்து திரிந்ததும் அடுப்பை அனைத்து விட்டு வடிகட்டவும் பிறகு நன்றாக தண்ணீரை பிழிந்து வைத்து எடுத்தால் செனா தயார். பிறகு பனீரை உதிர்த்து வைக்கவும்.

  2. 2

    ரப்படி செய்ய வேறொரு கடாயில் பாலை சேர்த்து அரை பங்காக வற்ற செய்யவும்.இப்போது உதித்த பன்னீரில் கான்பிளவர் மாவு சேர்த்து 10 நிமிடங்கள் க்நீட் செய்து பிசறவும்.

  3. 3

    பிறகு சிறிது மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி இரண்டு கைகளால் அழுத்தி தட்டி வைக்கவும். கடாயில் ஒரு பங்கு சீனி நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் சென்னா சேர்த்து 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்

  4. 4

    ஒரு பத்து நிமிடம் வெந்தபின் திருப்பி போட்டு மறுபடியும் ஒரு பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது அரை பங்காக குறைந்த பாலில் குங்குமப்பூ சேர்த்து பொடித்த பிஸ்தா பாதாம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கால் கப் சீனி சேர்த்து கொதிக்க விடவும். பின் செனா சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

  6. 6

    இதை குளிர்சாதனப் பெட்டியில் அரைமணிநேரம் வைத்து பிறகு பரிமாறினாள் மிகவும் நன்றாக இருக்கும். சுவையான ரசமலாய் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes