முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#worldeggchallenge
முட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 6 முட்டை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. உப்பு தேவையான அளவு
  6. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  9. ஒரு ஸ்பூன் சீரக தூள்
  10. 1/2 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  11. 1 ஸ்பூன் மல்லித் தூள்
  12. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு
  13. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. காரத்துக்கு ஏற்ப மிளகுத்தூள்
  15. தேவையானஅளவு எண்ணெய்
  16. சின்ன துண்டு வாழைஇலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டின் நடுவில் ஓட்டைகளை அடைப்பதற்கு வாழை இலையை வைத்து கொள்ளவும். இட்லி குக்கர் இருந்தால் எண்ணெய் தடவி அதில் செய்யலாம். படத்தில் காட்டியவாறு இட்லி தட்டின் நடுவில் வைத்துக் கொள்ளலாம். முட்டை கீழே வடியாமல் இருக்க இதனை செய்துள்ளேன்.

  2. 2

    இட்லி தட்டில் முட்டையை ஆப்பாயில் போடுவது போல் முட்டையை உடைத்து கொள்ளவும். இட்லி சட்டியில் வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும்.

  3. 3

    நன்றாக வெந்த பின்பு ஆறவைத்து வாழை இலையில் இருந்து தனியாக பிரித்து முட்டையை எடுத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    தக்காளி நன்றாக வதங்கிய பின்பு சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  7. 7

    அதனுடன் சேர்த்து தனி மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்

  8. 8

    தேவையான அளவு மல்லித்தூள் சேர்த்து பொடி வாசனை போகும் வரை நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

  9. 9

    சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லித் தலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  10. 10

    பின்பு வேக வைத்து எடுத்துள்ள முட்டை இட்லியை மசாலாவுடன் சேர்த்து மெதுவாக கிளறவும். இல்லையென்றால் முட்டை உடைந்து மஞ்சள் கரு தனியாக வந்துவிடும். பூ போல மெதுவாக முட்டை மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

  11. 11

    காரத்திற்கு ஏற்ப மிளகுத் தூள் சேர்த்து நன்றாக பிரட்டவும். ஏற்கனவே நாம் மிளகாய்த்தூள் சேர்த்து உள்ளதால் காரம் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.

  12. 12

    சுவையான காரசாரமான முட்டை மிளகு இட்லி தயார். இதனை நாம் இட்லி, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றுடனும் சைட்டிஸ் ஆக வைத்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes