முட்டை தம் பிரியாணி

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# worldeggchallenge
# salna

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பேர்
  1. 4 முட்டை
  2. 2 கப் பாஸ்மதி அரிசி
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4 கப் தயிர்
  7. புதினா கொத்தமல்லி ஒரு கைப்பிடி
  8. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. உப்பு தேவையான அளவு
  10. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  11. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. தாளிக்க
  13. 2பட்டை, ரெண்டு பிரிஞ்சி இலை, 4 கிராம்பு
  14. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து பொன் நிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    பானில் எண்ணெய், நெய் சேர்த்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளிக்கவும்,பாதி வெங்காயம்,புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  3. 3

    இப்போது மிளகாய் தூளை சேர்த்து வதக்கி தயிரை சேர்த்து மேலும் வதக்கவும். வேறொரு பேனில் சிறிது எண்ணெய் சேர்த்து1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுக்கவும். பிறகு அதை சேர்க்கவும்.

  4. 4

    அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து கிளறவும். அதன் மேலே மீதி உள்ள வெங்காயத்தை சேர்க்கவும்

  5. 5

    இதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் முக்கால் பாகமாக வற்றியதும் சிறிது கொத்தமல்லி புதினா இலைகளை மேலே தூவி விடவும்.

  6. 6

    மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் முட்டை தம் பிரியாணி தயார். எல்லோருக்கும் பிடித்தமான முட்டை பிரியாணி பரிமாறி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes