எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

55 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 3/4 கப் மைதா
  2. 3/4 கப் நறுக்கிய வால்நட்ஸ்
  3. 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய உலர் திராட்சை
  4. 75 கிராம் வெண்ணெய்
  5. 1/4 கப் பொடித்த சர்க்கரை
  6. 1 முட்டை
  7. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1 டீஸ்பூன் துருவிய எலுமிச்சை தோல்
  9. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

55 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் மிருதுவான வெண்ணை மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து க்ரீம் போல் வரும் வரை கிளறவும்... பிறகு இதனுடன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்

  2. 2

    முட்டை நன்றாக ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு மைதா, பேக்கிங் பவுடரை சலித்து இதனுடன் சேர்த்து அதையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கும் வரை கிளறிக் கொள்ளவும் பிறகு பொடித்த வால்நட்ஸ் மற்றும் நறுக்கிய உலர் திராட்சையை சேர்க்கவும்

  3. 3

    இதனுடன் துருவிய எலுமிச்சம் பழம் தோல், வெனிலா எசன்ஸ் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கவும்

  4. 4

    பேக்கிங் ட்ரெயின் மேல் பட்ட சீட்டை வைத்து தயாரித்து வைத்திருக்கும் கலவையை படத்தில் காட்டியவாறு இரண்டாக பிரித்து வைக்கவும் பிறகு மைதா மாவை சிறிது தொட்டு படத்தில் காட்டியவாறு இரண்டையும் நீளவாக்கில் சரிசம படுத்திக் கொள்ளவும்

  5. 5

    அவனை 180 டிகிரி செல்சியஸ் இருக்கு ப்ரீ ஹீட் செய்து 25 நிமிடம் வைத்து எடுக்கவும்... பிறகு இதனை 30 நிமிடம் ஆற விடவும்

  6. 6

    நன்றாக ஆறிய பிறகு படத்தில் காட்டியவாறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் வெட்டிய துண்டுகளை மறுபடியும் பேக்கிங் ட்ரேயில் வைத்து 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் வைக்கவும்... 15 நிமிடத்தில் 7 நிமிடம் ஆன பிறகு திருப்பி வைத்து மீதியிருக்கும் நிமிடங்களில் பேக் செய்யவும்

  7. 7

    சுவையான அட்டகாசமான வால்நட்ஸ் பிஸ்காட்டி தயார் நீங்களும் இதனை ஒருமுறை செய்து பாருங்கள்

  8. 8

    குறிப்பு ; வால்நட்ஸ் பதிலாக பாதாம் சேர்த்து செய்யலாம்.. மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகப்படுத்தலாம்... வெண்ணைக்கு பதிலாக எண்ணெய் பயன்படுத்தலாம்... முதலில் நன்றாக ஆறிய பிறகு தான் வெட்ட வேண்டும் இல்லை என்றால் மாவாக இருக்கும்... இரண்டு பக்கம் பொன்னிறமாக பொரித்து பிறகு நன்றாக ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes