அமராந் விதை பர்பி (Amaranth vithai burfi recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4#week14#Amaranthseedburfi.
கீரை விதையில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளன கீரை விதை யில் கால்சியம், மக்னீசியம்,அயன் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

அமராந் விதை பர்பி (Amaranth vithai burfi recipe in tamil)

#GA4#week14#Amaranthseedburfi.
கீரை விதையில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளன கீரை விதை யில் கால்சியம், மக்னீசியம்,அயன் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 50 கிராம்தண்டு கீரை விதை
  2. 50 கிராம்வெல்லம்
  3. தலா ஒரு டேபிள்ஸ்பூன்முந்திரி பருப்பு,பாதாம், கிஸ்மிஸ்.
  4. ஒரு ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு கடாயை நன்கு சூடுபடுத்தி கீரை விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்க வேண்டும்.கீரை விதை பாப்கான் போல் வெடிப்பதனால் அதனை ஒரு மூடி போட்டு வைத்து தான் வறுக்க வேண்டும்.

  3. 3

    கீரை விதைகளை வடித்தெடுத்த பின்பு ஒரு கடாயில் நெய் ஒரு ஸ்பூன் போட்டு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்க்க வேண்டும்.

  4. 4

    பாகு கட்டி பதம் வந்தவுடன் நாம் வறுத்து வைத்துள்ள அமராந் விதைகளை போட வேண்டும. பின் பாதாம், முந்திரி,கிஸ்மிஸ் ஆகியவற்றை போட வேண்டும்.

  5. 5

    பின் எல்லாம் வெல்லப்பாகுடன் கலந்த பின் ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி வேண்டும்.

  6. 6

    இப்போது சத்தான சுவையான அமராந் விதை பர்ஃபி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes