வெஜிடபிள் கொழுக்கட்டை/Vegetable kolukkattai
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் கொர கொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும். அதனுடன் 1 கப் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து நைசாக அரைத்து, அரைத்த அரிசி மாவுடன் கலந்து விடவும்.
- 2
1 பெரிய கேரட் தோல்நீக்கி கழுவி, துருவி வைக்கவும். 8 பீன்ஸை பொடியாக நறுக்கி வைக்கவும். 1 கப் பச்சை பட்டாணியை எடுத்து வைக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பை பொன்னிறமாக தாளித்து விடவும்.
- 3
அதனுடன் 10 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை,1/2 டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து வணக்கி, துருவிய கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி, சேர்த்து நன்கு வதக்கி விடவும். உப்பு சிறிது சேர்த்து நன்கு கலக்கி தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு அரைத்த மாவை சேர்த்து விடவும்.
- 4
நன்கு வணக்கி விடவும். மாவு கையில் ஒட்டாமல் வரும்பொழுது வதக்கி வைத்த காய்கறி கலவையை சேர்த்து நன்கு கலக்கி வணங்கி விடவும்.
- 5
நன்கு வணக்கி, கையில் சிறு சிறு கொழுக்- கட்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 8 நிமிடம் வேகவிடவும்.
- 6
சுவையான வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.😋😋 இதற்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை சட்னி, இட்லிபொடி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
-
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
-
-
-
Fried Rice
#cookwithfriends#Bk Recipesஎன் தோழியும் நானும் கொரானாவினால் எங்கும் வெளியே செல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்த பிரைட்ரைஸ் ஐ செய்து Cookpad மூலமாக பகிர்ந்து கொண்டோம்.Thanks to Mahi Paru.... Happy friendship Day to all. 👭 Shyamala Senthil -
-
-
-
More Recipes
கமெண்ட் (6)