ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#Grand2
ஸ்வீட் பீடாவில் பஜ்ஜி செய்துள்ளேன்.இது என்னுடைய புதிய முயற்சி.

ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)

#Grand2
ஸ்வீட் பீடாவில் பஜ்ஜி செய்துள்ளேன்.இது என்னுடைய புதிய முயற்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5 வெத்தலை
  2. 5 பாதாம் பருப்பு
  3. 5 முந்திரி பருப்பு
  4. தேன் தேவையான அளவு
  5. 5 ஜெர்ரி பழம்
  6. பேரீட்ச்சை பழம் தேவையான அளவு
  7. குல்கந்து தேவைப்பட்டால்
  8. கிராம்பு தேவையான அளவு
  9. 1 கப் கடலை மாவு
  10. 1/2 பீட்ருட்
  11. 1 பின்ச் உப்பு
  12. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  13. 1/2 டம்ளர் காய்ச்சிய பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான வெத்தலையை எடுத்து நன்றாக கழுவி அதன் பின்புறம் 1 ஸ்பூன் தேன் தடவிக் கொள்ளவும்.

  2. 2

    தேன் தடவிய பின்பு 1 ஜெர்ரீ பழம்,பாதாம்,முந்தரி பருப்பு வைக்கவும்.

  3. 3

    பேரீட்ச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.(குல்கந்து, சீரக மிட்டாய் என தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம்)பின்பு, நான்கு புறமும் மடித்துக் கொள்ளவும்.படத்தில் காட்டியவாறு.

  4. 4

    வெத்தலை பிரியாமல் இருக்க அதன் மைய பகுதியில் கிராம்பு சொறுகவும்.எத்தனை பீடா தேவையோ அத்தனை செய்துக் கொள்ளலாம்.

  5. 5

    1/2 பீட்ருட்டை மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.பின்பு,ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரைத்து எடுத்த பீட்ருட் ஜூஸ் சேர்க்கவும்.

  6. 6

    அதனுடன் 1/2 டம்ளர் காய்ச்சிய பால்,1 பின்ச் உப்பு சேர்க்கவும்.

  7. 7

    கையால் மாவை நன்றாக கலக்கவும்.பஜ்ஜி பேட்டர் தயார்.ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

  8. 8

    எண்ணெய் சூடு ஏறவும்,பீடாவை பஜ்ஜி பேட்டரில் முக்கி எண்ணெய்யில் போடவும்.

  9. 9

    3 நிமிடம் இரு புறமும் பிரட்டி நன்றாக வேக வைக்கவும்.நன்றாக வெந்த பின்பு எண்ணெய்யை நன்றாக வடிகட்டி எடுக்கவும்.

  10. 10

    சுவையான ஸ்வீட் பிங்க் கலர் பீடா பஜ்ஜி ரெடி.சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes