சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் சுகர்
  3. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1 சிட்டிகை உப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர்
  6. 1/4 கப் தேங்காய் எண்ணெய்
  7. 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  8. 1/2 கப் தயிர்
  9. 1/4 கப் வால்நட் - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  10. 1/4 கப் துருவிய சாக்லேட்
  11. 1 டீஸ்பூன் நெய்
  12. 1/2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் உப்பை சேர்த்து கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் சூடாக்கவும்.

  2. 2

    கேக் செய்யும் பாத்திரத்தில் நெய் எல்லா பக்கத்திலும் தேய்க்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கோக்கோ பவுடர், சுகர் சேர்க்கவும்.

  4. 4

    அதன் பின் பேக்கிங் பவுடர், உப்பு சேர்க்கவும்.

  5. 5

    பாத்திரத்தில் சேர்த்த பொருட்களை நன்றாக கிளறவும்.

  6. 6

    பின்பு தேங்காய் எண்ணெய், தயிர், வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.

  7. 7

    பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

  8. 8

    அதன் பின் வால்நட், துருவிய சாக்லேட் சேர்த்து கிளறி கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றவும்.

  9. 9

    கடைசியாக வால்நட், துருவிய சாக்லேட்டை தூவி விடவும்.

  10. 10

    கேக் செய்யும் பாத்திரத்தை இரண்டு முறை தட்டி கடாயில் வைத்து மூடி 20 நிமிடங்கள் மிதமான சூட்டில் பேக் செய்யவும்.

  11. 11

    20 நிமிடங்களுக்கு பிறகு கத்தியை ப்ரௌனியின் நடுவில் குத்தி ப்ரௌனி தயாராகி விட்டதா என்று சரி பார்க்கவும். கத்தியில் ப்ரௌனி ஒட்டாமல் இருந்தால் கேக் டின்னை அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைத்து விரும்பிய வடிவில் வெட்டி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes