தேவையான பொருட்கள்

20நிமிடம்
4பேர்
  1. 100கி கோவைக்காய்
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/2துண்டு இஞ்சி நறுக்கியது
  5. சிறிதுகறிவேப்பிலை
  6. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2டீஸ்பூன் மல்லித்தூள்
  8. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  9. 1/4டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  10. உப்பு
  11. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கோவைக்காயை கழுவி,சுத்தம் செய்து, நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கோவைக்காயை மட்டும் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதே வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள்,சீரகத்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் ஏற்கனவே வறுத்த கோவைக்காய் சேர்த்து கலந்து வதக்கவும்.

  5. 5

    கோவைக்காய் மசாலாவுடன் கலந்து வதங்கியதும், வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes