கோவைக்காய் தயிர் கிரேவி (Bengali Dish)
சமையல் குறிப்புகள்
- 1
8 கோவைக்காயை கழுவி இரண்டு நுனிகளையும் நறுக்கி நீளவாக்கில் கோடுகள் போட்டவாறு நறுக்கி வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கோவைக்காய்களை நன்கு வதக்கி வைக்கவும்.
- 2
1 துண்டு இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைக்கவும்.1 டீஸ்பூன் தேங்காய் துருவலுடன் 1 டீ ஸ்பூன் கசகசாவை சேர்த்து மிக்ஸியில் ஜாரில் அரைத்து வைக்கவும்.ஒரு தட்டில் சீரகத்தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன் தனியா தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா 1/2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.
- 3
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் பிரிஞ்சி இலை 2 சேர்த்து பச்சைமிளகாய் 2 நறுக்கியது வரமிளகாய் 1 கிள்ளியது வதக்கி, அரைத்த இஞ்சி 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும். அரைத்த தேங்காய் கசகசா விழுதை சேர்க்கவும்.தட்டில் எடுத்து வைத்த மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
- 4
வதக்கி வைத்த கோவைக்காயை சேர்த்து பிரட்டவும். 1 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- 5
கடலைமாவு தண்ணீரை கோவைக்காயில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து உப்பு சேர்த்து வேகவிடவும். கடலை மாவு சிறிது கெட்டியானவுடன் தயிர் ஒரு கப் சேர்த்து கலக்கி விடவும்.
- 6
சுவையான கோவைக்காய் தயிர் கிரேவி ரெடி. சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
-
கோவைக்காய் தக்காளி கிரேவி
#arusuvai6கோவைக்காய் தக்காளி கொண்டு மிக எளிதில் செய்யும் புதுவிதமான கிரேவீ இது. Meena Ramesh -
-
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (10)