சிக்கன் மிளகு வறுவல் (Chicken milagu varuval recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#nv

சிக்கன் மிளகு வறுவல் (Chicken milagu varuval recipe in tamil)

#nv

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1/2 கிலோசிக்கன்
  2. 1தக்காளி
  3. 8சின்ன வெங்காயம்
  4. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. கருவேப்பிலை
  6. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. 1 ஸ்பூன்மல்லித்தூள்
  8. 1/2 ஸ்பூன்சிக்கன் மசாலா
  9. 5 ஸ்பூன்தேங்காய் துருவல்
  10. 1/2 ஸ்பூன்சோம்பு
  11. 1/4 ஸ்பூன்மிளகு
  12. 1 சிறியதுபட்டை
  13. 2கிராம்பு
  14. 1 ஸ்பூன்மிளகுத்தூள்
  15. 2 ஸ்பூன்எண்ணெய்
  16. 1/4 ஸ்பூன்கசகசா

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலில் சிக்கனை மஞ்சள்தூள் போட்டு 3 தடவை கழுவி சுத்தம் செய்யவும்.

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு,சோம்பு போட்டுத் தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

  4. 4

    பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு தக்காளியை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

  5. 5

    பிறகு அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா போட்டு 1 நிமிடம் வதக்கவும்.

  6. 6

    பிறகு சுத்தம் செய்த சிக்கனை அதில் போட்டு ஒரு நிமிடம் ஒரு வதக்கு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி 2 நிமிடம் வேகவிடவும்.

  7. 7

    பிறகு தேங்காய் கசகசா சோம்பு மிளகு சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

  8. 8

    அரைத்த தேங்காய் விழுதை சிக்கன் மசாலாவில் ஊற்றி 2 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைத்து கிரேவி பதத்திற்கு வந்ததும் ஒரு ஸ்பூன் மிளகு தூள், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறி நிறுத்தவும்.

  9. 9

    சுவையான சிக்கன் மிளகு வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes