தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. முட்டை 3
  2. பெரிய வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  6. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. பச்சை மிளகாய் 2
  10. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு தக்காளி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  3. 3

    தக்காளி நன்கு வதங்கியவுடன் கரம்மசாலா மிளகாய்த்தூள் சேர்க்கவும். பாயில் செய்து எடுத்த முட்டையை நன்கு துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ரோல் செய்வதற்கு சிறிய சைஸ் சப்பாத்தி உருட்டி அடுப்பில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு எக் கீமாவை எடுத்து சப்பாத்தி நடுவில் வைக்கவும்.

  5. 5

    ஏக் கீமாவை வைத்தவுடன் ரோல் செய்து பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes