உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சத்து, ருசி, மணம் நிறைந்த குழம்பு. எல்லோருக்கும் உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் பிடிக்கும். உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #ve

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60  நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. கிரேவி செய்ய:
  2. 3 மேஜை கரண்டி நல்லெண்ணை
  3. 1 தேக்கரண்டி கடுகு
  4. 1 தேக்கரண்டிசீரகம்
  5. ½ தேக்கரண்டி வெந்தயம்
  6. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  7. சிட்டிகை பெருங்காயம்
  8. ¼ கப் கறிவேப்பிலை
  9. 10பெர்ல் அனியன்ஸ் (frozen)(சின்ன வெங்காயம்)
  10. 1 கப் தக்காளி துண்டுகள்
  11. 1 மேஜை கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம்,ஓமம், மிளகு)
  12. ½ தேக்கரண்டிகாஷ்மீரி சில்லி பவுடர்
  13. தேவையானஉப்பு
  14. ¼ கப் கொத்தமல்லி,பொடியாக நறுக்கியது
  15. பேஸ்ட்:
  16. தேவையானநல்லெண்ணை
  17. 1 மேஜை கரண்டி கடலை பருப்பு
  18. 1 மேஜை கரண்டிஉளுந்து
  19. 1 மேஜை கரண்டிகொத்தமல்லி விதைகள்
  20. 3வர மிளகாய்
  21. 1 தேக்கரண்டி சோம்பு
  22. 2 மேஜை கரண்டி நல்லெண்ணை
  23. 10 சின்ன வெங்காயம் வ்ரோஜன் (frozen)
  24. 2அங்குலம் இஞ்சி, பொடியாக நருக்கியது
  25. 5 பூண்டு பல்
  26. 2 பச்சை மிளகாய்
  27. 2 கப் தக்காளி துண்டுகள்
  28. ½ தேக்கரண்டி மஞ்சள்
  29. 1 கப் தேங்காய் துண்டுகள்
  30. 1/4. கப் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது
  31. டம்ப்லிங்க் செய்ய
  32. ¾ கப் ஆல் பர்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு
  33. 2 மேஜை கரண்டி நல்லெண்ணை
  34. 1 கப் உருளை, நீராவியில் வேகவைத்து தோலுரித்து துருவியது
  35. ¼ கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  36. 1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது
  37. 1 தேக்கரண்டி பூண்டு துருவியது
  38. 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் துருவியது
  39. தேவையானஉப்பு
  40. குழம்பு

சமையல் குறிப்புகள்

60  நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    பேஸ்ட் தயாரிக்க குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லேட்டில் நல்லெண்ணை சேர்க்க; சூடானதும் கடலை பருப்பு சேர்த்து கிளற, 2--3 நிமிடங்கள்;; நிறம் மாறும் சிறிது போன சிவப்பாகும். உளுந்து சேர்த்து கிளற, 2--3 நிமிடங்கள்; மிளகு, வெந்தயம், சீரகம், தனியா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளற. தனியா நிறம் மாறி நல்ல வாசனை வரும். மிளகாய்,, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துகிளற.. மிளகாய் காந்த கூடாது. வீடு முழுதும் வாசனை தூக்கும். அடுப்பை அணைக்க வறுத்த பொருட்களை தண்ணீரில் ஊறவைக்க

  4. 4

    குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லேட்டில் 2மேஜைகரண்டி நல்லெண்ணை சேர்க்க; வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்தது வதக்க. தக்காளி சேர்த்து வதக்க.
    எல்லா பொருட்களையும். ஒரு பிளெண்டரில் தேங்காயுடன் சேர்த்து அறைக்க

  5. 5

    டம்பலிங் செய்ய: கொதிக்கும் வென்நீரை கிண்ணத்தில் இருக்கும் மாவில் சிறிது சிறிதாக ஊற்றி ஸ்டிக்கி டோ செய்க. நீட் செய்து சூப்பர் சாஃப்ட் மாவு செய்க. உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுக. ஓரு ஈரத்துணியால் முடி 15 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. எடுத்து சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி மறுபடியும் நீட் செய்க. கையால் இழுத்து ஸ்டெரேட்ச் (stretch) செய்க.
    சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி மெல்லியதாக ரோல் செய்க; எல்லா பக்கமும் இழுத்து ஸ்டெரேட்ச் (stretch) செய்க கு க்கி கட்டரால் வட்டமாக வெட்டுக

  6. 6

    ஸ்டவிங் செய்ய குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லேட்டில் நல்லெண்ணை சேர்க்க; சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்க. பிரவுன் ஆனதும் மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க. ஆறவைக்க.
    1 மேஜை கரண்டி ஸ்டவிங்கை ரேப் வட்டத்தின் நடுவில் வைத்து மூடி சீல் செய்க (படம்) போர்க்கால் ஓரங்களை அழுத்துக. டம்பலிங் குக் செய்ய தயார்.ஹை விலேமின் மேல் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்க. கொதிக்கும் நீரில் டம்பலிங்கை மெல்ல சேர்க்க. வெந்த பின் மேலே மிதக்கும். வலை கரண்டியால் எடுத்து தண்ணீர் வடிக்க

  7. 7

    பின் ஒரு தட்டில் வைக்க. 15 டம்பலிங் குழம்பில் சேர்க்க தயார்.
    கிரேவி செய்ய: குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லேட்டில் நல்லெண்ணை சேர்க்க; சூடானதும் கடுகு சேர்க்க. கடுகு பொறிந்ததும், மெந்தயம், பூண்டு சேர்த்து கிளற. வெங்காயம் சேர்த்து வதக்க., தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள், காஷ்மீரி சில்லி சேர்த்து வதக்க. 6 கப் நீர் சேர்க்க. கொதித்து பச்சை வாசனை போகட்டும்.-10-15 நிமிடங்கள் ஆகும். பெருங்காயம். ஸ்பைஸ் பொடி சேர்த்து கிளற. பேஸ்ட் சேர்க்க. நன்றாக கொதிக்கட்டும். எண்ணை மேலே மிதக்கும். அடுப்பை அணைக்க.

  8. 8

    ருசி பார்க்க கொத்தமல்லி சேர்க்க. குழம்பு தயார்,

    ஒரு ஷேலோ போலில் டம்லிங்க்ஸ் வைத்து குழம்பாய் அதன் மேல் ஊற்றுக. ருசியான உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் சேர்த்த தக்காளி குழம்பு பரிமாற தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes