எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1முட்டை
  2. 1கப் கோதுமை மாவு
  3. 1வெங்காயம்
  4. 1கேரட்
  5. 1/2குடைமிளகாய்
  6. 1/2ஸ்பூன் கருப்பு உப்பு
  7. 2ஸ்பூன் தக்காளி கெட்ச்அப்
  8. 1ஸ்பூன் சர்க்கரைத் தூள்
  9. வேகவைத்த ராஜ்மா
  10. 1/2 எலுமிச்சை பழம் சாறு
  11. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 1ஸ்பூன் சாட் மசாலா தூள்
  13. தண்ணீர்
  14. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும். பிறகு வெங்காயம், கேரட், குடைமிளகாய் காய்கறிகளை நீளமாக கட் செய்து வைத்து கொள்ளவும். இதில் சாட் மசாலா தூள்,மிளகாய்த்தூள், எலுமிச்சை பழம் சாறு,சர்க்கரைத் தூள், தக்காளி கெட்ச்அப், மற்றும் தேவையான அளவு கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    சிறிய உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும். அடுத்து தவாவை சூடு செய்து செய்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

  3. 3

    அடுத்து தவாவில் செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி அதன் மேல் செய்த சப்பாத்தியை வைத்து லேசாக அழுத்தவும். மேலே எண்ணெய் சேர்க்கவும். சப்பாத்தியை எடுத்து அதில் செய்து வைத்த காய்கறி சாலட் மற்றும் வேகவைத்த ராஜ்மா சேர்த்து சுருட்டி வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    முட்டை சப்பாத்தி ரோல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes