செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)

Revathi
Revathi @cook_25687491

# GA4 # Week 23 (Chettinad)

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 250 கிராம் சிக்கன்
  2. 100 கிராம் சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய்
  5. இஞ்சி பூண்டு விழுது
  6. சிறிதளவுகருவேப்பிலை, உப்பு, மற்றும் எண்ணெய்
  7. தேவையானஅளவு தேங்காய் துருவல் (அரைக்க)
  8. அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  10. 2 தேக்கரண்டி மல்லி
  11. 1 தேக்கரண்டி சீரகம்
  12. 1 தேக்கரண்டி சோம்பு
  13. அரை தேக்கரண்டி மிளகு
  14. சிறிதளவுபட்டை, கிராம்பு,ஏலக்காய், பிரிஞ்சி இலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் மல்லி, சீரகம்,சோம்பு,மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை அனைத்தையும் வறுத்து பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் சிக்கன் சேர்க்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.

  4. 4

    இப்பொழுது நாம் முதலில் அரைத்து வைத்த மசாலா பொடியை சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    இறுதியாக அரைத்து வைத்த தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதோ ரெடி செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் குழம்பு சாப்பிடலாமா வாங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi
Revathi @cook_25687491
அன்று

Similar Recipes