எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்(250கிராம்)சீரகசம்பா அரிசி
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி(சின்னது)
  4. 2பச்சை மிளகாய்
  5. 2டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  6. 1கைப்பிடி புதினா
  7. 1கைப்பிடி கொத்தமல்லி
  8. 2-4துண்டு பட்டை,பூ
  9. 6கிராம்பு
  10. 1கொத்து கறிவேப்பிலை
  11. 1\4கப்தயிர்
  12. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  13. 3டேபிள்ஸ்பூன் நெய்
  14. 2கப் தண்ணீர்
  15. 1பின்ச் கேசரி கலர்
  16. தேவைக்கு ஏற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை மூன்று முறை நன்கு கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு அடிகனமான பாத்திரம் அல்லது கடாயில் எண்ணெயும், நெய்யும் சேர்த்து காயவிடவும்

  3. 3

    காய்ந்ததும் பட்டை, பூ, கிராம்பு சேர்த்து தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து அடுப்பை சிறிது குறைவான தணலில் வைத்து நன்கு வதக்கி விடவும்

  5. 5

    பிறகு இஞ்சி பூண்டு விழுது வதக்கி விட்டு, பாதி அளவு புதினா, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்

  6. 6

    இப்போது தயிர் சேர்த்து கிளறி பிறகு தக்காளி சேர்த்து மெதுவாக வதக்கவும். (மசிக்க கூடாது)

  7. 7

    இதனை மிதமான தீயிலேயே ஒரு நிமிடம் வரை வைத்து வதக்கவும்

  8. 8

    பிறகு 1கப் அரிசி க்கு 2 கப் வீதம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சரி பார்க்கவும்

  9. 9

    தண்ணீர் வடித்து அரிசி சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து மூடி வைக்கவும்

  10. 10

    இடை இடையே திறந்து பார்க்கவும். அரிசியும் தண்ணீரும் சமமாக வந்த பிறகு அதாவது அரிசி வெந்து தண்ணீர் வற்றி வரவும்

  11. 11

    கேசரி கலரை சிறிது தண்ணீரில் கரைத்து சுற்றிலும் ஊற்றவும். அதாவது சில இடங்களில் மட்டும்

  12. 12

    பிறகு மீதமிருக்கும் புதினா கொத்தமல்லி தழையை தூவி விடவும்

  13. 13

    அடுப்பில் தோசை கல்லை குறைந்த தணலில் வைத்து அதன்மேல் இந்த சட்டியை வைத்து மூடி போடவும்.

  14. 14

    அதன்மேல் நன்கு கனமான பொருளை வைக்கவும். அதாவது தம்மில் 10 நிமிடங்கள் வைத்து அணைக்கவும்.

  15. 15

    சுவையான பாய் வீட்டு நெய் சோறு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes