தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 பரிமாறுவது
  1. 30 லெமன்
  2. 50 கிராம் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  3. 2 டேபிள்ஸ்பூன் சக்தி மிளகாய்த்தூள்
  4. கல் உப்பு தேவையான அளவு
  5. 1 கப் நல்லெண்ணெய்
  6. 2 ஸ்பூன் கடுகு
  7. 1 ஸ்பூன் வெந்தயம்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    எலுமிச்சம் பழத்தை பத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் அதனுடன் இடித்து தூள் செய்த கல் உப்பை சேர்த்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்து பத்து நாட்கள் வரை தினமும் வெயிலில் வைத்து எடுக்கவும்

  2. 2

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் ஊறவைத்த எலுமிச்சை சேர்த்து நன்கு வதக்கவும் கூட மிளகாய்த்தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும் பின் ஆறிய பிறகு எலுமிச்சை ஊறுகாய் உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    முழுவதும் சூடாறியதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலை கழுவி துடைத்து 1_2 மணி நேரம் வரை வெயிலில் வைத்து எடுக்கவும் பின் அதில் இந்த ஊறுகாயை நிரப்பி கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes