தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. 1 கப் ரவை
  2. 1 கப் சர்க்கரை
  3. 1 கப் ஆரஞ்சு ஜூஸ்
  4. ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  5. 10 முந்திரி
  6. 10 திராட்சை
  7. ஐந்து டேபிள்ஸ்பூன் நெய்
  8. 4 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கொதிக்கும் 2 ஸ்பூன் நேரில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியையும் திராட்சையையும் வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் ரவையை கொட்டி வாசனை வரும்வரை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் 2 கப் நீர் விட்டு கொதிக்க ஆரம்பித்தவுடன், ரவையை கொட்டி வேகும் வரை கிளறவும். ரவை வெந்து கெட்டியானவுடன் சர்க்கரையை கொட்டி கிளறவும். இப்பொழுது ரவை சிறு சிறு கட்டிகளாக இருக்கும். அவை கரையும் வரை கிளறி கொண்டே இருக்கவும். பிறகு ஆரஞ்சு சாறு மற்றும் குங்குமப்பூ கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

  3. 3

    பிறகு மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு சுருண்டு வரும் வரை கிளறி, ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும். பின்பு வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை தூவிப் பரிமாறவும். வித்தியாசமான சுவையில் ஆரஞ்சு கேசரி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes