தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1 1/2 கப் சர்க்கரை
  3. 75 மில்லி நெய்
  4. 4 ஏலக்காய்
  5. 10 முந்திரி
  6. 1 ஸ்பூன் கோதுமை மாவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாசிப்பருப்பை வறுத்து எடுக்கவும் பிறகு குக்கரில் பாசிப்பருப்பு சேர்த்து மூன்று கப் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வந்ததும் இறக்கி மசித்து எடுக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் 4 ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து எடுக்கவும் பிறகு அதில் கோதுமை மாவு சேர்த்து வறுத்து அதில் மசித்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்

  3. 3

    பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு அதில் தண்ணீரில் கலக்கி வைத்துள்ள கலர் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்

  4. 4

    பிறகு மீதமுள்ள நெய்யை சேர்த்து ஏலக்காய் பவுடர், முந்திரி சேர்த்து கிளறி அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் வைக்கவும்

  5. 5

    இப்பொழுது சுவையான அசோகா அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes