சைவ கோழி குழம்பு

Suku
Suku @cook_29460551
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. சீரகம் 2 தேக்கரண்டி
  2. சோம்பு 1 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் 10-15
  4. பூண்டு 5-8 பல்
  5. தேங்காய் துருவல் 1/2 கப்
  6. பட்டை 1 சிறிய துண்டு
  7. கிராம்பு 2
  8. பிரியாணி இலை 1
  9. கடுகு 1/2 தேக்கரண்டி
  10. குழம்பு தூள் காரத்திற்கு ஏற்ப
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் 1 குழி கரண்டி
  13. காலி பிளவர் 1 சிறியது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெறும் வாணலியில் சீரகம் சோம்பு வறுத்து தனியே வைக்கவும்

  2. 2

    வானலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தே‌ங்கா‌ய் சேர்த்து வதக்கி இறக்கவும்

  3. 3

    வறுத்த சோம்பு சீரகம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம் பூண்டு தேங்காய் குழம்பு தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  4. 4

    குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு கடுகு சேர்த்து தாளிக்கவும்

  5. 5

    அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்

  6. 6

    சிக்கன் துண்டுகளை போல் நறுக்கி சுத்தம் செய்த காலிஃப்ளவர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்

  7. 7

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 2 விசில் வரும்வரை வேகவிடவும்.

  8. 8

    கருவேப்பிலை தூவி பரிமாறவும். சைவ கோழி குழம்பு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @cook_29460551
அன்று

Similar Recipes