சமையல் குறிப்புகள்
- 1
கோழிக் கறியை துண்டுகளாக்கி, அலசிக் 1/2 வேக்காடாக கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும். கொத்த மல்லி இலையை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
அடி கனமான பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 3
பின் அதனோடு இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். 1 நிமிடம் கழித்து மசால், கோழிக்கறி, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீரைத் தெளிக்கவும்.
- 4
விரவினது போல் உள்ள கோழிக்கறி கலவையை அடுப்பை சிம்மில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும். இடை இடையே மெதுவாக கிளறி விடவும்.
- 5
கோழிக்கறி வேகும்போது எண்ணெய் பிரிந்து வந்ததும் பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்த மல்லி இலையைத் தூவி இறக்கவும். சுவையான கோழி சாப்ஸ் தயார்.
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட்