குறுமிளகு சிக்கன் ஃப்ரை

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேருக்கு
  1. 200 கிராம் சிக்கன்
  2. 100 கிராம் சிறிய வெங்காயம்
  3. ஒரு தக்காளி
  4. இரண்டு வரமிளகாய்
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. இரண்டு பட்டை
  7. இரண்டு கிராம்பு
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  9. 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  10. 3 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  11. இரண்டு டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  12. கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  13. 4 டேபிள் ஸ்பூன் குறுமிளகு
  14. கருவேப்பிலை மல்லித்தழை
  15. உப்பு
  16. சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு வர மிளகாய் பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் இதை அனைத்தையும் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் வதக்கிய பிறகு இது 3 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் பிறகு நாம் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்

  2. 2

    பிறகு மசாலா நன்கு கலந்த பிறகு 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலாவை சேர்க்க வேண்டும் பிறகு காஷ்மீரி மிளகாய் தூளை சேர்க்க வேண்டும் பிறகு குரு மிளகையும் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் அப்படியே விட வேண்டும்

  3. 3

    2 நிமிடம் கழித்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிக்கன் வேகும் வரை சமைக்க வேண்டும்
    சிக்கன் நன்கு வெந்த பிறகு தண்ணீர் எல்லாம் வற்றி நன்கு கிரேவி பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லி தழை கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்க வேண்டும்

  4. 4

    சுவையான குறுமிளகு சிக்கன் ஃப்ரை ரெடி ஆக்கிவிட்டது இத்துடன் சாதம் சப்பாத்தி இட்லி தோசை என்று அனைத்துக்கும் பொருத்தமாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes

More Recommended Recipes