உளுந்து வெங்காய வடை

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#Np3
விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30+30 நிமிடங்
4 பேர்
  1. 1 தம்ளர் குண்டு உளுத்தம் பருப்பு
  2. 1 ஸ்பூன் பச்சரிசி
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. இஞ்சி தேவை என்றால்
  6. 1 ஸ்பூன் தலா மிளகு,சீரகம்
  7. 1 ஸ்பூன் தூள் உப்பு
  8. கருவேப்பிலை சிறிது பொடியாக அறிந்தது
  9. 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
  10. பொறிக்க தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1.30+30 நிமிடங்
  1. 1

    முதலில் ஒரு தம்ளர் பூண்டு உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் பச்சரிசி சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும். மிதக்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒன்னேகால் அல்லது ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். இதற்கிடையில் ஒரு பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு மற்றும் சீரகத்தை நுணுகி கொள்ளவும்.கறிவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக அரிந்து கொள்ளவும். நான் இஞ்சி சேர்க்கவில்லை தங்களுக்கு விருப்பம் என்றால் அரை ஸ்பூன் இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    உளுந்து ஊறிய பிறகு ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். பிறகு இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து வடை சுடுவதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய வைக்கவும். மாவை தண்ணீரில் கையை நனைத்து விட்டுகாயில் எடுத்து உருட்டி தட்டி மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இருபுறமும் திருப்பி போட்டு சிவக்க எடுக்கவும். இதை காலை நேரம் என்றால் சாம்பார் செய்த அதில் ஊற வைத்து சாம்பார் வடை சாப்பிடலாம். மாலை நேரத்தில் பொட்டுக்கடலை சட்னி செய்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes