மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)

#cookwithmilk
மோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilk
மோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பருப்புகள் அனைத்தையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். 2 பச்சை மிளகாய்,1 வர மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, உப்பு எடுத்து வைத்துக் கொள்ளவும்.அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் எடுத்துக்கொள்ளவும் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
மோர் குழம்பு தயாரித்து வைத்துக் கொள்ளவும். மோர் குழம்பு செய்முறை ஏற்கனவே கொடுத்துள்ளேன். ரெசிபியில் பார்த்துக் கொள்ளவும்.
- 3
பருப்பு வகைகள் இரண்டு மணி நேரம் ஊறிய உடன் தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் சுத்தமாக வடிந்தவுடன் கொஞ்சம் முழு பருப்புகளை (2 tbsp) தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதி பருப்பில் பெருங்காயத்தூள், உப்பு, பச்சை மிளகாய், வர மிளகாய் இஞ்சி துண்டுகள் சேர்த்து கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும். (நான் வெங்காயம் சேர்க்க வில்லை.விருப்பமென்றால் பெரிய வெங்காயம் ஒன்றை பொடியாக அரிந்து மாவு அரைத்தபிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை உடன் வடை மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.)
- 4
ஆட்டிய பருப்புடன் பொடியாக அரிந்த கருவேப்பிலை, கொத்தமல்லி, தனியாக எடுத்து வைத்த முழு பருப்புகள், எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடு ஏறியவுடன் ஆட்டிய மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போடவும். இரண்டு புறமும் திருப்பிப் போட்டு சிவக்க பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
வடையை மோர்க் குழம்பில் சேர்த்து மேலே கருவேப்பிலை கொத்தமல்லி தூவிக் கொள்ளவும். வடை மோர் குழம்பில் ஊற 20 நிமிடம் வரை ஆகும்.
- 6
வடை ஊறியவுடன் மோர் குழம்புடன் வடையை கப்பில் வைத்து பரிமாறவும். விருந்தினர் வரும்பொழுது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
-
கார வடை(Kara vadai recipe in Tamil)
*இது பாட்டி காலத்து பாரம்பரிய வடை ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடியது.#deepfry Senthamarai Balasubramaniam -
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
மோர் மைதா வடை (Buttermilk maida vadai) (Mor maida vadai recipe in tamil)
மைதா மாவில் கொஞ்சமும் தண்ணீர் சேர்க்காமல் மோர் மட்டும் சேர்த்து வடை செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். முயற்சித்தேன். சுவை அபாரம்.#GA4 #Week7 #Buttermilk Renukabala -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
#arusuvai4ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள். Shyamala Senthil -
-
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்