எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 4டம்ளர் பச்சரிசி
  2. 1டம்ளர் குண்டுஉளுந்து
  3. 1ஸ்பூன் வெந்தயம்
  4. 3 பெரியவெங்காயம்
  5. 5 பச்சைமிளகாய்
  6. 1/4ஸ்பூன் கடுகு
  7. 1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. கொத்துமல்லி இலைகள் ஒரு கொத்து
  10. தேவையானஅளவு உப்பு
  11. 2ஸ்பூன் எண்ணெய்
  12. தேவையானஅளவு நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி, குண்டுஉளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் மூன்று தடவை கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த குண்டு உளுந்து, வெந்தயத்தை யும் போட்டு தண்ணீர் தெளித்து தெளித்து நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.

  3. 3

    பிறகு அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசியை போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.

  4. 4

    அரைத்த அரிசி மாவையும், ஊளுந்தமாவையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு போட்டு கரைத்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

  5. 5

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

  6. 6

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டு வதக்கவும்.

  7. 7

    பிறகு அரைத்து வைத்த பணியாரமாவில் வதக்கியதை ஊற்றி கலந்து கொள்ளவும்.

  8. 8

    அடுப்பில் ஒரு பணியாரகல்லை வைத்து சூடானதும் ஒவ்வொரு குழியிலும் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பிறகு கலந்து வைத்த பணியாரமாவை அதில் ஊற்றி வேகவிடவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.பிறகு பரிமாறவும்.

  9. 9

    சுவையான செட்டிநாடு காரப்பணியாரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes