தயிர் சாதம்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Everyday2
அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் உதிராக வடித்த சாதம்
  2. 1 லிட்டர் தயிர்
  3. 1 கப் பால்
  4. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  5. 4 ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1 டேபிள்ஸ்பூன் கடுகு
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 4 வரமிளகாய்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. 5 பச்சை மிளகாய்
  13. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் மெல்லிய தீயில் வைத்து நன்கு சிவக்கும் வரை வறுக்கவும் பின் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கவும்

  2. 2

    பின் வடித்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தயிரை ஊற்றவும்

  3. 3

    பின் மிகவும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் பின் காய்ச்சி வெதுவெதுப்பாக இருக்கும் பாலை ஊற்றவும்

  4. 4

    பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்

  5. 5

    தயிரில பச்சைமிளகாய் ஊறி அப்படியே கடித்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் சுவையான ஆரோக்கியமான தயிர் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes