தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் துவரம்பருப்பு
  2. 6உருளைக்கிழங்கு
  3. 1 கப் சின்ன வெங்காயம்
  4. 8 பல் பூண்டு
  5. 6 தக்காளி
  6. 1/4 கப் திக்கான புளிக்கரைசல்
  7. 100 மில்லி கடலெண்ணெய்
  8. 4 வரமிளகாய்
  9. 3 ஸ்பூன் சாம்பார் பொடி
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் சீரகம்
  13. 10 வெந்தயம்
  14. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  15. கல் உப்பு தேவையான அளவு
  16. கறிவேப்பிலை சிறிது
  17. 1 ஸ்பூன் துருவிய வெல்லம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பு உடன் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேகவிடவும்

  2. 2

    உருளைக்கிழங்கு ஐ நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு சேர்த்து பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி வேகவிடவும்

  4. 4

    உருளைக்கிழங்கு வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வெல்லம் சேர்த்து கிளறி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான உருளைக்கிழங்கு சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes