தென்னிந்திய மீல்ஸ் 1 (Thenindia meals recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#kids3
என்னுடைய மகன் பள்ளிக்கு சென்ற போது (எல்.கே.ஜி ) அந்த ஸ்கூல் தலைமையாளர் குழந்தைகளுக்கு எந்த விதமான அசௌகரியங்களை (சிரமம்) பார்க்காமல் வறுத்த உணவுகள் சப்பாத்தி விட முழுமையான மதிய உணவு சாதம் பொரியல் பருப்பு ரசம் தயிர் இப்படி கொடுத்து அனுப்பி விடுங்க நாங்க சாப்பிட பழக்கி விடுகிறோம் ஏனென்றால் காலையில அவசரமாக சாப்பிட்டு வருவாங்க இரவு சரியாக சாப்பிட மாட்டார்கள் மேலும் இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க வேண்டும் அதனால் நன்றாக சாப்பிடுவது இந்த மதிய உணவு தான் அதை முழுமையான உணவாக கொடுத்து விடுங்கள் என்று கூறினார் வறுத்த பாஸ்புட் உணவுகளை வாரத்தில் ஒரு நாள் கொடுத்து விடுங்கள் என்று கூறினார் அதனால் இன்று வரை அவர்களுக்கு பருப்பு ரசம் பொரியல் தயிர் கலந்த முழு உணவு தான் வளரும் குழந்தைகளுக்கு இதுவே முழுமையான ஆரோக்கியமான உணவு இதை அவர்கள் விரும்பும் வகையில் செய்து கொள்ளலாம் வறுத்த சாதம் சான்ட்விச் சப்பாத்தி கொடுக்க வேண்டாம் என்பதில்லை நீங்களே யோசித்து பாருங்கள் ப்ரீ.கே.ஜி. முதல் கொண்டு +2 வரை 15 வருடங்கள் மீண்டும் காலேஜ் 3_5 வருடங்கள் இத்தனை வருடத்தில் அவர்களின் முழு உணவு நேரம் என்பது இந்த மதிய உணவு தான் அதனால் தயவுசெய்து வளரும் குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவை பழகப்படுத்துங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. சாதம் செய்ய:
  2. 1 கப் அரிசி
  3. 2 கப் தண்ணீர்
  4. தக்காளி பருப்பு செய்ய:
  5. 1 கப் துவரம்பருப்பு
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 6 நன்கு பழுத்த தக்காளி
  8. 8 வரமிளகாய்
  9. 6 பல் பூண்டு
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  14. 1 ஸ்பூன் கடுகு
  15. 1 ஸ்பூன் சீரகம்
  16. கல் உப்பு தேவையான அளவு
  17. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  18. ரசம் செய்ய:
  19. 2 கப் பருப்பு வேகவைத்த தண்ணீர்
  20. 3 தக்காளி
  21. 2 வரமிளகாய்
  22. 4 பல் பூண்டு
  23. 2 டேபிள்ஸ்பூன் திக்கான புளிக்கரைசல்
  24. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  25. 1/2 ஸ்பூன் கடுகு
  26. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  27. 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  28. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  29. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  30. கல் உப்பு தேவையான அளவு
  31. பீட்ரூட் பொரியல் செய்ய:
  32. 4 பீட்ரூட்
  33. 1 பெரிய வெங்காயம்
  34. 5 பச்சைமிளகாய்
  35. கறிவேப்பிலை சிறிது
  36. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  37. 1 ஸ்பூன் கடுகு
  38. 1 கப் தேங்காய் துருவல்
  39. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சாதம் செய்ய: அரிசியை இரண்டு முறை கழுவி தண்ணீரை ஊற்றி 25 நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் 5 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து இறக்கவும் விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஹாட்பாக்ஸில் போட்டு வைக்கவும்

  2. 2

    பீட்ரூட் பொரியல் செய்ய: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய பீட்ரூட் ஐ சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கிளறவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் பொரியல் ரெடி

  3. 3

    தக்காளி பருப்பு செய்ய: பருப்புடன் மஞ்சள் தூள் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குழைய வேகவிடவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும், பின் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும் தக்காளி சுருண்டு வந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி பருப்புடன் சேர்த்து சூடான நெய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும்

  4. 4

    ரசம் செய்ய: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வரமிளகாய் இடித்த பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் சீரகத்தூள் பெருங்காயத்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும் பின் புளிக்கரைசல் ஐ ஊற்றி நன்கு வதக்கவும் பின் பருப்பு தண்ணீரை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்

  5. 5

    இப்போது அருமையான மதிய உணவு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes