திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#vattaram
#Week1
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புளியோதரை வர மிளகாய் நிலக்கடலை மிளகாய் தூள் சேர்க்க மாட்டார்கள் பாரம்பரிய முறைப்படி மிளகுத்தூள் சீரகம் வெந்தயம் கடலைப் பருப்பு பச்சையாக கருவேப்பிலை சேர்த்து புளியோதரை செய்வார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
8 பரிமாறுவது
  1. ஆரஞ்சு பழ அளவு புளி
  2. ரெண்டு ஸ்பூன் வெந்தயம்
  3. ரெண்டு ஸ்பூன் சீரகம்
  4. ரெண்டு ஸ்பூன் கடுகு
  5. இரண்டு ஸ்பூன் உளுந்து
  6. 3 ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 20 பல் முந்திரிப்பருப்பு
  8. இரண்டு ஸ்பூன் மிளகுத் தூள்
  9. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. தேவையானஉப்பு
  12. தேவையானஅளவு தண்ணீர்
  13. 4 குழிக்கரண்டி நல்லெண்ணெய்
  14. நாலு கொத்து கருவேப்பிலை
  15. வடித்த சாதம் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    புளியை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்பு கெட்டியாக கரைத்து கசடு இல்லாமல் வடிகட்டி வைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து இரண்டு குழிதோண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் பெருங்காயத்தூள் தாளித்து

  3. 3

    புளிக்கரைசலை ஊற்றி மஞ்சத்தூள் தேவையான உப்பு சேர்த்து கொதி விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து புளிக் கரைசல் நன்கு கெட்டியாகும் வரை நல்லெண்ணெயை பிரிந்து மேலே வரும் வரை கொதிக்கவிட வேண்டும்

  4. 4

    இன்னொரு கடாயில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடலை பருப்பு வெள்ளை உளுத்தம்பருப்பு முந்திரிப்பருப்பு சிவக்க வறுத்து செய்து வைத்துள்ள புளிக் கரைசலை அதில் ஊற்றி சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்

  5. 5

    வடித்த சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வைத்து உதிரி உதிரியாக வரும் அதில் மிளகுத் தூள் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை தேவைக்கேற்ப ஊற்றி நன்றாக கிளறி உப்பு தேவைப்பட்டால் போட்டு கருவேப்பிலை பச்சையாக மேலே தூவி கிளறவும்

  6. 6

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை பாரம்பரியமான ரெடி மட்டுமே சேர்க்கப்படும் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி புளியோதரை செய்கிறார்கள்

  7. 7

    தேவைக்கு மட்டும் புளிக்காய்ச்சல் பயன்படுத்திக் கொள்ளலாம் தண்ணீர் படாத பாட்டில்கள் அடைத்து ஆறு மாதங்கள் வரை கைபடாமல் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
Patti used to go to this temple often. Reminds me of good old days. Well done

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes