பெருமாள் கோவில் புளியோதரை

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#vattaram2
#புளியோதரை
#vattaram

பெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.

தனித்திருப்போம்
விழித்திருப்போம்
வீட்டிலேயே இருப்போம்

பெருமாள் கோவில் புளியோதரை

#vattaram2
#புளியோதரை
#vattaram

பெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.

தனித்திருப்போம்
விழித்திருப்போம்
வீட்டிலேயே இருப்போம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. புளி - எலுமிச்சை அளவு
  2. கட்டி பெருங்காயம் - 1 அங்குலம்
  3. காய்ந்த மிளகாய் - 8
  4. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  5. எள்ளு - 1 தேக்கரண்டி
  6. மல்லி விதை - 2 தேக்கரண்டி
  7. கடுகு - 1 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை - 10
  9. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  10. நிலக்கடலை - 2 தேக்கரண்டி
  11. கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. நல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி
  13. உப்பு-தேவையான அளவு
  14. வெல்லம் - 1 கப்
  15. பச்சரிசி - 1 டம்ளர்
  16. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    புளியை வெந்நீரில் ஊற வைக்கவும்

  2. 2

    கடாயில் 1 தேக்கரண்டி கடலை எண்ணெய் விட்டு
    1.பெருங்காயம்
    2.மல்லி - 2 தேக்கரண்டி
    3.கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    4.எள்ளு
    5. காய்ந்த மிளகாய்-6 ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    சிறிது நேரம் கழித்து சூடு குறைந்ததும் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    புளியை கரைத்து தோல் நீக்கி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    கடாயில் 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு

    •கடுகு-பொரிய
    •கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி - சிவக்க
    •கடலை-சிவக்க
    •மிளகாய் - 2
    • கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வதக்கவும்

  6. 6

    அடுப்பை அடக்கி விட்டு மஞ்சள்தூள் சேர்க்கவும்

  7. 7

    கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி கிளறவும்

  8. 8

    தேவையான அளவு உப்பு சேர்த்து இடைவேளி விட்டு மூடி வைக்கவும்

  9. 9

    கொதித்து சுண்டியதும், அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, தீயை மீடியமாக வைத்து கிளறவும்

  10. 10

    இடைவெளி விட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும், அவ்வப்போது திறந்து கிளறவும்

  11. 11

    1 கப் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்

  12. 12

    கறிவேப்பிலை போட்டு இறக்கி விடவும்.

    சுவையான புளிக்காய்ச்சலே தயார்

  13. 13

    1 டம்ளர் பச்சரிசியில் 2.5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  14. 14

    வேக வைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் அள்ளி வைத்து, 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சுற்றி ஊற்றவும்

  15. 15

    புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளறவும்

  16. 16

    கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே இறைவனுக்கு நிவேதனம் செய்து விட்டு நாமும் உண்டு மகிழுவோம் 🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes