எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடங்கள்
நான்கு பேர்
  1. இட்லி அரிசி இரண்டு கப்
  2. உளுந்து அரை கப்
  3. மாவு ஜவ்வரிசி கால் கப்
  4. உப்பு தே. அளவு
  5. ஆமணக்கு விதைகள் நான்கு

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடங்கள்
  1. 1

    இட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி ஆறு மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    உளுந்து மற்றும் ஜவ்வரிசியை கழுவி தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடவும்.

  3. 3

    முதலில் அரிசியை கிரைண்டரில் சேர்த்து ரொம்ப மையாக இல்லாமல் முக்கால் பதத்திற்கு அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.

  4. 4

    உளுந்து மற்றும் ஜவ்வரிசியை ஆமணக்கு விதைகளின் தோல் நீக்கி தண்ணீரை வடித்து கிரைண்டரில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பொங்க பொங்க அரைக்கவும்.

  5. 5

    அரிசி அரைத்த மாவுடன் உளுந்து கலவை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு கலக்கி ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.

  6. 6

    புளித்த மாவை அடித்து கலக்காமல் இலேசாக கலந்து விட்டு இட்லி தட்டில் ஊற்றி பதினைந்து நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.

  7. 7

    பந்து போல சாஃப்டான குஷ்பூ இட்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (3)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
பார்த்தால் கல் மாதிரி உள்ளது. நான் செய்து பார்க்கிறேன்

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes