காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#Vaataram2
*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.

*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது.

காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)

#Vaataram2
*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.

*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. இட்லி மாவு அரைப்பதற்கு
  2. 1 கப் பச்சரிசி
  3. 1/4 கப் உளுந்தம் பருப்பு
  4. 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிப்பதற்கு
  7. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  8. அரை டேபிள்ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  9. அரை டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு (விருப்பப்பட்டால்)
  10. 1 டேபிள் ஸ்பூன் மிளகு (ஒன்றும் பாதியுமாக பொடித்தது)
  11. 1 டேபிள் ஸ்பூன் சீரகம் (ஒன்றும் பாதியுமாக பொடித்து)
  12. 1/4 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்
  13. 1/2 டேபிள் ஸ்பூன் சுக்கு தூள்
  14. கருவேப்பிலை சிறிதளவு
  15. கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி, உளுத்தம்பருப்பு வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் ஊறவிடவும். இதில் இருக்கும் தண்ணீரை வடித்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். இதில் சிறிது தண்ணீர் தெளித்து ரவை பதத்துக்கு வந்ததும் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும். இப்பொழுது இட்லி மாவு தயார். ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சிறிது சிவக்க வறுத்து மாவுடன் சேர்க்கவும்.

  2. 2

    அதே கடாயில் நெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு பொரிந்ததும் கடலைப் பருப்பு பெருங்காயத்தூள் பொடித்த மிளகு சீரகம் வறுத்து மாவுடன் சேர்க்கவும்.

  3. 3

    இதனுடன் கொத்தமல்லி கருவேப்பிலை சுக்குத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒரு வட்டமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி இட்லி மாவை ஊற்றவும்.

  4. 4

    ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் மாவு பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி போட்டு மூடி 10 முதல் 15 நிமிடங்கள் வேக விடவும்.குறிப்பு :- வேகவைக்கும் பொழுது இடை இடையில் வெந்துவிட்டதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.

  5. 5

    இட்லி வெந்ததும் அடுப்பை அணைத்து நன்கு ஆறியதும் ஒரு தட்டுக்கு மாற்றி துண்டுகளாக கட் செய்து கொண்டு எடுத்தால் சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes