தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்

Rani Subramanian
Rani Subramanian @1411rani

அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது

#everyday2

தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்

அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது

#everyday2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
10 பேர்
  1. புளிப்பில்லாத மாங்காய் - 2, வெல்லம் - 100gm, நல்லெண்ணெய் - 50ml,
  2. மிளகாய்பொடி - 1 டீஸ்பூன், வெந்தயப்பொடி - 1 1/2 டீஸ்பூன்,
  3. பெருங்காயம்-1/2டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன்,
  4. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்
  5. இஞ்சி-1 சிறிய துண்டு, வெள்ளைபூண்டு - 8 பல்

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    புளிப்பில்லாத மாங்காயை தோல் சீவி, கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும். இஞ்சி,பூண்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

  2. 2

    அடிகணமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து

  3. 3

    அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெந்தயப்பொடி.பெருங்காயப் பொடி மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்பு அதில் துருவியமாங்காய், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். மாங்காய் வெந்து, மெதுவாக ஆனதும், வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து வெல்லம் கசிந்து பின் மாங்காயுடன் கலந்து சுருண்டு வரும் வரை வதக்கி ஆறியபிறகு சாப்பிடவும்.

  5. 5

    பால் சாதம் சப்பாத்தி போன்றவற்றிற்கு சிறந்த இணை உணவாக இருக்கும். இனிப்பாக இருப்பதால் சிறுவா்களும் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rani Subramanian
அன்று

Similar Recipes