சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வரமல்லி, வர மிளகாய், கருவேப்பிலை தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வாழைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
வறுத்த மசாலாக்களை நன்றாக ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 4
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
- 5
பிறகு அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய வாழைக்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள் உப்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
- 6
வாழைக்காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 7
இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் தயார். இது தயிர் சாதத்தோடு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
-
More Recipes
கமெண்ட்