எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கறுப்பு கொண்டைகடலை ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. தக்காளி1
  4. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  5. மிளகாய்தூள் அரை டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  7. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  8. தனியா தூள் கால் டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. கருவேப்பிலை சிறிது
  11. கொத்தமல்லி சிறிது
  12. பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் தலா ஒன்று
  13. சோம்பு கால் டீஸ்பூன்
  14. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு தேவைக்கேற்ப சேர்த்து 5 விசில் விட்டு குக்கரில் வேகவிடவும்

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணையை விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

  3. 3

    கருவேப்பிலை தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி சேர்த்து வதக்கி அதில் மிளகாய் தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தனியாதூள் உப்பு சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் அதில் வேகவைத்த கொண்டைகடலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும்

  6. 6

    தேங்காய் துருவலை விழுதாக அரைத்து கவலையுடன் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்

  7. 7

    ஆப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes