கேரளத்தின் சுவையான கடலை கறி

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#combo #Combo2 #combo2

ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.

நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேரளத்தின் சுவையான கடலை கறி

#combo #Combo2 #combo2

ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.

நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் கருப்பு கொண்டைக்கடலை
  2. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 6 பற்கள் பூண்டு
  5. 1 அங்குலம் இஞ்சி
  6. 1 கிராம்பு
  7. 1 அங்குலம் பட்டை
  8. 1 ஏலக்காய்
  9. 1 ஸ்பூன் சோம்பு
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. 1 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  12. 2 ஸ்பூன் மல்லித்தூள்
  13. 1 ஸ்பூன் உப்பு
  14. 2 கப் தண்ணீர்
  15. 1/2 கப் தேங்காய் துருவல்
  16. 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  17. 1 காய்ந்த மிளகாய்
  18. 10 கறிவேப்பிலை
  19. 1/2 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கொண்டைக்கடலையை 8 மணி நேரத்திற்கு குறையாமல் ஊற வைக்கவும்

  2. 2

    8 மணி நேரம் கழித்து
    தக்காளி இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு ஆகியவற்றை பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலை, வெங்காயம், அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் ஆகியவை சேர்க்கவும்

  4. 4

    மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்

  6. 6

    குக்கரை மூடி விசில் போட்டு, ஸிம்மில் அரை மணி நேரம் வைக்கவும்

  7. 7

    அரை மணி நேரம் கழித்து, கடாயில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு துருவிய தேங்காயை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்

  8. 8

    சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக அரைக்கவும்

  9. 9

    குக்கரில் பிரஷர் இறங்கிய பின் திறந்து அரைத்த தேங்காயை சேர்த்து மீடியம் ப்ளேமில் வைத்து 2 நிமிடங்கள் சமைத்து இறக்கவும்

  10. 10

    கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்

  11. 11

    தாளித்த வற்றை கடலை கறியில் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes