காய்கறிகள் நிறைந்த - மாப்பிள்ளை சொதி

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#vattaram #week4 #vattaram4

காய்கறிகளை தேங்காய் பாலுடன் சேர்த்து சமைத்து உண்ணும் அருமையான உணவு

குறிப்பு :

1.இந்த ரெசிபியில் பச்சை பட்டாணிக்கு பதில் முளை கட்டிய பயறு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

2.தேங்காய் பால் சேர்ப்பதால் சமைக்கும் பொழுது மூடக் கூடாது.

3.தேங்காய் பாலை மூன்றாக பிரித்து, மூன்றாம் பாலில் காய்கறிகளை வேக வைக்கலாம், விதவிதமான காய்கறிகள் சேர்ப்பதால் வேகும் நேரம் மாறுபடும். இதனால் குக்கரில் வேக வைக்கும் பொழுது நேரம் மிச்சமாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 ஸ்பூன்பயத்தம்பருப்பு -
  2. 1உருளைக்கிழங்கு -
  3. 1காரட் -
  4. 1முருங்கைக்காய் -
  5. 1கத்திரிக்காய் -
  6. 1பெரிய வெங்காயம் -
  7. 10 பற்கள்பூண்டு -
  8. 10அங்குலம்இஞ்சி -
  9. 3பச்சை மிளகாய் - (காரத்திற்கு ஏற்ப)
  10. 3பீன்ஸ் -
  11. 1/4 கப்பச்சை பட்டாணி -
  12. 10கறிவேப்பிலை -
  13. 1தேங்காய் -
  14. 1 மூடிஎலுமிச்சை -

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பயத்தம்பருப்பை கடாயில் சற்று வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்

  2. 2

    தேங்காயை உடைத்து துருவி, இரண்டு விதமாக பால் எடுக்க வேண்டும்.

    முதல் பால் திக்காக இருக்கும், இரண்டாம் பால் தண்ணீராக இருக்கும்

  3. 3

    காய்கறிகளை நன்றாக அலசி, நறுக்கி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் பருப்பும், காயும் இரண்டு விசில் வைக்கவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு இஞ்சி வதக்கவும்

  5. 5

    பச்சை மிளகாயை இரண்டாக பிளந்து கடாயில் சேர்த்து பொரிய விடவும்

  6. 6

    நீட்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

  7. 7

    கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்க வேண்டும்

  8. 8

    சிறிது வெந்ததும் வேக வைத்த காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து மீடியம் பிளேமில் 4 நிமிடங்கள் வைக்கவும்

  9. 9

    வேக வைத்த பருப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து,
    முதல் தேங்காய் பால் ஊற்றி இறக்கவும்

  10. 10

    எலுமிச்சை பிழிந்து கலந்து சுவையான சத்தான சொதிக் குழம்பை பரிமாறவும்

  11. 11

    நான் புலவ் உடன் சேர்த்து சாப்பிட்டேன், மீதம் இருந்தால் அடையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes