ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்

Sowmya
Sowmya @vishalakshi

#combo4
அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1/2 டம்ளர் பச்சரிசி
  2. 1/2 டம்ளர் பாசிப்பருப்பு
  3. 6 டேபிள் ஸ்பூன் நெய்
  4. 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  5. 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  6. 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
  7. 10முந்திரி பருப்பு
  8. 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள்
  9. 10கருவேப்பிலை இலைகள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரை டம்ளர் பச்சரிசி அரை டம்ளர் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றி 2 முறை நன்றாக அலசி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    அரை மணி நேரம் கழித்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு குக்கரில் போட்டு அதில் மூன்றே முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 3 விசில் வரை விட வேண்டும் விசில் வந்தவுடன் குக்கரை உடனே திறக்காமல் 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்

  3. 3

    பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து பார்த்தால் பொங்கல் சாதம் நன்றாக வெந்திருக்கும் ஒரு கரண்டி வைத்து பொங்கல் சாதத்தை கிண்டினால் அது நன்றாக குழைந்து வெந்து இருப்பது தெரியும் இந்த சமயத்தில் பொங்கலை தாளித்து விடலாம்

  4. 4

    பொங்கல் தாளிப்பதற்கு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி நெய் நன்றாக சூடான உடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு சேர்த்து பொரிய விட வேண்டும் மிளகு பொரிந்தவுடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து விடவேண்டும்

  5. 5

    அடுத்து நாம் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு பொடியாக இஞ்சியை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் அதை மிளகு சீரகத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்

  6. 6

    இஞ்சியின் பச்சை வாசனை போன பிறகு அதில் 10 முந்திரி பருப்புகளை உடைத்து நெய் கலவையில் சேர்க்க வேண்டும் அது பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும்

  7. 7

    பிறகு கால் டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் எடுத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு அதனை நெய் கலவையில் சேர்க்க வேண்டும் இப்படி சேர்த்தால் பெருங்காயம் எல்லா பக்கமும் நன்றாக கலந்துவிடும் சேர்த்த பிறகு அதில் பத்து கருவேப்பிலை இலைகளை சேர்த்து தாளிக்த பிறகு அடுப்பை‌ அணைத்து விட வேண்டும்

  8. 8

    தாளித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு தாளித்தவற்றை எடுத்து நாம் வைத்துள்ள பொங்கல் கலவையில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்

  9. 9

    கிளறிவிட்டு அதன் மேற்பரப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை எடுத்து ஊற்றிவிட்டு மீண்டும் மூடி ஒரு இருபது நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும்

  10. 10

    20 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் நாம் சுவைக்க காத்திருக்கும் மிகவும் சுவையான மிகவும் ஆரோக்கியமான காலை உணவான வெண் பொங்கல் தயார் இதற்கு தேங்காய் சட்னியும் வடையும் வைத்து சாப்பிட்டால் தனி சுவையுண்டு வாங்க சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes